உன் மேல் நட்பு கொள்ள வந்தவரும்,
உனக்கு வருத்தத்தை கொடுத்து..,
உன்னை ஈன்றவரும் இன்னல்களை
இரைத்து..,
உன் கைப்பிடித்து அழைத்து
மகிழ்த்திடு என உன்னை பொய்யாய் வாழ்த்திட
சொல்லுதடி..,
அடிமேல் அடிவிழுந்து
அளவின்று அழுகும் அழகிய உன் மனம்
இரவு, பகல் எதுவென்று அறியாமல்
கையேந்தி நிற்கிறாய்..,
பிறரின் யாசகத்திற்காக அல்ல,
சிறிய பாசத்திற்காக..,
உன் சின்னஞ்சிறு முகத்தில்
சற்று சிறிதாகத் தெரிந்த சினத்தினை அறிந்த
நிலவின் தேவதைகள் சிறகை உமக்கு
சீதனமாக அளித்து, அதனை உன் தோள்களில்
சுமந்து சென்று வளர்பிறைப் போல் வளர்த்திடு..,
அப்பொழுது தான் நட்சத்திரங்களும்
உன்னை சிறைபிடிக்கும் எதிரியாக அல்ல!
அவைகளின் தோழியாக..,
- sathick
இரு நதிகள் இணையும் தருணம்!
அது மீண்டும் அடைய இயலா!
அது பிரிய விரும்பா தருணம்!
அது திகட்ட ஒரு இன்பம்!
அது இன்பத்தின் உட்ச்சம்
அது அண்டத்தின் அலைவரிசை!
அது பிறப்பின் பாக்கியம்
அது காதலின் அலைவரிசை!
அது அணு அணுவாய்!
அடையும் ஒரு சுகம்!
எனக்கு அறுபது!
மனைவிக்கு ஐம்பத்தியேழு!
நான் அடைகிறேன் இன்பம்!
இன்று வரை,
அடைவேன் இன்பம் வரும்!
காலம் வரை..,
பிறகும் குறையாது. என்!
மரத்திற்கு பிறகும் அழியாது!
பிரதிபலிக்கும் பிறர் வாழ்வில்!
“திருமணம்”
நதியோர நாணல்!
கற்களில் புஞ்சை!
பூக்களின் மகரந்தம்!
காற்றின் அலையுடன் குயிலோசை!
தொலைதூரம் காண முடியாது,
மரம் அதற்கு தடை.
மரத்தினால் காண முடியாது!
மரம் உணர்ந்த இன்பம்!
அதை,
மனிதன் கண்டு உணர்ந்தால்,
அதுவே,
இயற்கை!
-சையது பைசல்



























