உன் மேல் நட்பு கொள்ள வந்தவரும்,
உனக்கு வருத்தத்தை கொடுத்து..,
உன்னை ஈன்றவரும் இன்னல்களை
இரைத்து..,
உன் கைப்பிடித்து அழைத்து
மகிழ்த்திடு என உன்னை பொய்யாய் வாழ்த்திட
சொல்லுதடி..,
அடிமேல் அடிவிழுந்து
அளவின்று அழுகும் அழகிய உன் மனம்
இரவு, பகல் எதுவென்று அறியாமல்
கையேந்தி நிற்கிறாய்..,
பிறரின் யாசகத்திற்காக அல்ல,
சிறிய பாசத்திற்காக..,
உன் சின்னஞ்சிறு முகத்தில்
சற்று சிறிதாகத் தெரிந்த சினத்தினை அறிந்த
நிலவின் தேவதைகள் சிறகை உமக்கு
சீதனமாக அளித்து, அதனை உன் தோள்களில்
சுமந்து சென்று வளர்பிறைப் போல் வளர்த்திடு..,
அப்பொழுது தான் நட்சத்திரங்களும்
உன்னை சிறைபிடிக்கும் எதிரியாக அல்ல!
அவைகளின் தோழியாக..,
- sathick