அழகியே(Wife)
என் கற்பனை காவியம்!
நகர விரும்புகிறேன்
உணரவும்...,
பொது நலன் கருதிய வாழ்வு!
போதும் என மனம் விரும்பிய
உணர்வு...,
என் தனிமையை உடைத்தவள் நீ!
எனக்கெனவென்று இருந்த தாய்மையை புதுப்பித்தவள் நீ
அழகியே நீ!
என் தலைமுறையின் கருவரையாய் நீ!
என் மழழைகளின் கல்வி அறையாய் நீ
அழகியே நீ!
எனக்கு முன்பே இரு குழந்தைகள்!
ஆனால் வயதோ இரட்டிப்பு...,
என் மனம் வாடும்!
என் கை மீது உன் கை சேரும்!
அது போதும்.
அப்போது, வார்த்தை அது வீண் விரையம்...,
என் மனம் புலம்பும் வார்த்தைகளால்!
அப்போது, உன் அழகிய வார்த்தை!
அது அவசியம்.
அழகியே!
விரும்புகிறேன்! உன் விருப்பங்களை அறிய.
என் பார்வையில் அழகு. அலங்காரத்தில் அல்ல...,
இயல்பில், குணத்தில், எதார்த்தத்தில்!
என் தோல் சுருங்கும்!
பலவீனம் மீண்டு வரும்!
பின்பு ஒரு வாழ்வுண்டு!
அதில் நீ நிரந்தரம்!
அழகியே..., -சையது பைசல்
https://youtu.be/pG-o702hHuo-YouTube for video
0 comments